நாளை காலை டிக்ளேரா? இங்கிலாந்து திட்டத்தை உடைத்த பென் ஸ்டொக்ஸ்!

6 February 2021, 10:43 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது நாள் ஆட்டத்திற்கான திட்டத்தை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதன் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதம் அடித்துக் கைகொடுக்க, இங்கிலாந்து அணி வலிமையான நிலையில் உள்ளது.

இதற்கிடையில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி செயல்படுத்த உள்ள திட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டோக்ஸ் கூறுகையில்,“இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இன்னிங்சை டிக்ளேர் செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை. நாளைய ஆட்டத்திலும் முதல் ஒரு மணி நேரம் தாக்குபிடிப்பதே தற்போதைய திட்டம். தாக்குப்பிடிப்பதோடு, ரன்கள் சேர்க்கும் அனைத்து சாதகமான வழிகளையும் செயல்படுத்துவோம்.

தவிர, இந்திய அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ் பவுலிங் செய்வது என்பது இந்த ஆடுகளத்தில் அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளின் போது நாட்கள் அதிகமாகும் போது பலர்களுக்குச் சாதகமாகச் செயல்படாது. ஏனென்றால் இங்கு நிலவும் வெப்பம் மிக முக்கியப்பங்கு வகிக்கும். இதனால் ஆடுகளம் அதிக வறட்சியாக இருக்கும். தவிரப் பிளவுகளும் உருவாகும். இதனால் தான் முதல் இன்னிங்சில் அதிகளவு ரன்கள் சேர்க்க முயல்கிறோம். மேலும் இந்திய அணிக்கு எதிராக 20 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். இதனால் இங்கிலாந்து பவுலிங் கூட்டணிக்கு இனிதான் அதிக கடினமான வேலை உள்ளது” என்றார்.

Views: - 35

0

0