‘ஒரு வருடமாகியும் ஒன்னே கால் அடி உயரம்தான்’; அதிசய ஆட்டுக்குட்டி… ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 11:17 am
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி ஒரு வருடத்தில் ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்த ஆட்டு கிடா குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயி ஆன இவர், வீட்டில் ஆடு, மாடு,கோழி என கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

இதில் அவர் வளர்த்து வந்த ஆடு கடந்த ஒரு வருடத்திற்கு முன் குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு கிடா குட்டி மட்டும் மிக சிறியதாக இருந்துள்ளது.

ராபின்சன் அந்த ஆட்டு குட்டியை தனி கவனம் செலுத்தி கடந்த ஒரு வருடமாக வளர்த்து வந்துள்ளார். ஆரோக்கியமாக உள்ள அந்த ஆட்டு கிடா குட்டி ஒன்றே கால் உயரமே வளர்ந்துள்ளது.

இது கலப்பின குட்டியாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,ஒன்றே கால் அடி உயரமே வளர்ந்துள்ள அந்த ஆட்டு குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனே பார்த்து செல்கின்றனர்.

Views: - 531

0

0