‘பட்டாசு வெடிக்க முடியாம போய்டுமோ’ : 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

14 November 2020, 1:23 pm
rainy-updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. அதேபோல, வடதமிழக கடற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் லேசான முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 20

0

0