சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4 பேருக்கு அரிவாள் வெட்டு : தொழிலாளர்கள் போர்க்கொடியால் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 1:01 pm
Market Attack - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி காய்கறி மார்க்கெடடில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு. இந்த நாள் நான்கு மணி நேரம் சுமை இழக்காத காரணத்தினால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் தினந்தோறும் 20 முதல் 25 டன் வரை திண்டுக்கல் மாவட்டம் சுத்தி உள்ள பகுதியில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும்.

நேற்று நள்ளிரவு மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் அபிபுல்லா, தனது கடைக்கு சுமையை இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைத்துள்ளார். இதில் அபிபுல்லாவிற்கும், சுமை இருக்கும் தொழிலாளர்களுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை மார்க்கெட்டில் உள்ள சங்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அபிபுல்லா, ரவுடி கும்பலை வரவழைத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் நான்கு பேரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மார்க்கெட்டில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் திண்டுக்கல் நகரில் உள்ள அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அதிகாலை இறக்க வேண்டிய காய்கறி மூடைகளை இறக்காமல் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதனால் காந்தி மார்க்கெட்டில் 4 மணி நேரம் காய்கறிகள் விற்கப்படாமல் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு சமூகத் தீர்வு காண்பதற்காக நாளை ஒருநாள் விடுமுறை விட்டு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர்.

Views: - 440

0

0