8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது.. போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
28 November 2022, 6:06 pm
Quick Share

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கரைமேடு கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக சாமுவேல் செல்லதுரை பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை (50) என்பவர் பள்ளியின் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் தலைமை ஆசிரியரும், பள்ளி தாளாளருமான சாமுவேல் செல்லதுரையை கைது செய்து சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 134

0

0