பாலியல் புகாரின் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் : குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 9:51 am
Nagarajan - Updatenews360
Quick Share

சென்னை : பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.
தடகள பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல்துறையினரிடம் புகார் வந்தது. இதையடுத்து நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து செய்தனர். இந்நிலையில்,சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Views: - 148

0

0