தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகம் ; மோப்பநாய் உதவியுடன் 5 மணிநேர சோதனை!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 4:33 pm
Quick Share

திருவள்ளூர் ; திருவள்ளூரில் தனியார் மெட்ரிக் பள்ளி துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, மோப்பநாய் உதவியுடன் 5 மணி நேர சோதனை நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பஞ்சட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளி. இங்கு மெட்ரிக் பள்ளியில் துணை முதல்வராக உள்ள திலக் என்பவருக்கு செல்போனில் வெடிகுண்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் பேரில் கவரப்பேட்டை போலீசார் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் சிறப்பு நிபுணர்கள் உதவியுடன், போலீசார் ஒவ்வொரு கட்டிடத்திலும், அறைகளிலும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னையில் இருந்து மருதம் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சீசர் மோப்ப நாய் மாயா உள்ளிட்ட இரண்டு மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் 5,000 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தொடர்ந்து, சோதனை மேற்கொண்டு வந்தனர். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

எனவே, இது வெடிகுண்டு மிரட்டல் புரளி எனவும், வெளிநாட்டு எண்மூலம் மிரட்டலை மெட்ரிக் பள்ளி துனை முதல்வர் திலக் என்பவருக்கு விடுத்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.

நவீன தொழில் நுட்ப உதவியுடன் மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டறிய உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு இல்லை என தெரிவித்தது தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் பெற்றோர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

வெடிகுண்டு சோதனை குறித்து டிஎஸ்பி இடம் கேட்டபோதும் உரிய தகவல் அளிக்காமல் அங்கிருந்து உடனடியாக வெளியேறி சென்றார்.

Views: - 144

0

0