கொரோனாவிற்கு நிதி ஒதுக்கிய பி.ஆர்.நடராஜன்…

26 March 2020, 4:05 pm
Quick Share

கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து, 95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்க ஒதுக்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய ஆபத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து, 95 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயினை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார்.

இதில் குறிப்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்டிலேட்டர், மல்டி பேரா மானிட்டர், என்.ஐ.வி பிப்பேப், முக கவசங்கள், தெர்மல் ஸ்கேனர், பி.பி அப்பேரட்டஸ் உள்ளிட்ட 16 வகையான முக்கிய மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோருக்கு இன்று அளித்தார்.