கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

19 December 2020, 2:23 pm
rain chance - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Views: - 19

0

0