“பவர் இழந்த நிவர்“ : சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்தளவில் இயக்கம்!!

26 November 2020, 10:36 am
chennai Bus - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் வலுவிழந்து கரையை கடந்த நிலையில், மழை பெய்து வருவதால் சென்னை மாநகரில் குறைந்த அளவு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக நகர்ந்து பின்னர் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தாலும் காற்றும் மழையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரின் சேலான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தொடங்கியது. இருப்பினும், மாநகர பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுகின்றன.

Views: - 0

0

0