மாணவி தற்கொலை விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் இழந்துவிட்டார் : வானதி சீனிவாசன்!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2022, 2:25 pm
கோவை : மாணவி லாவண்யா மதமாற்றம் தொடர்பாக தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று பா. ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மாணவி லாவண்யா மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கும் வகையில் இந்த வழக்கை சிறந்த முறையில் கையாண்ட வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றி தெரிவிக் கிறோம்.
தன்னை மதம் மாற்ற முயற்சி செய்யப்ட்டதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தற்கொலை வழக்கை விசாரிக்கும் போது உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்பது சட்டத்தின் மாண்பு.
ஆனால், எந்த விசாரணையும் இல்லாமல் காவல்துறை மற்றும் அமைச்சர்கள் மாணவி மரணத்திற்கும் மதமாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என சான்றிதழ் கொடுக்கிறார்கள்.
மாணவர்கள் தற்கொலை செய்தால் வீட்டிற்கு செல்லும், முதல்வர் இந்த தற்கொலை வழக்கில் மாணவி வீட்டுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. முறையான விசாரணை நடத்தவும் உத்தரவிடவில்லை.
இந்த வழக்கின் மூலம் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளார் முதலமைச்சர். காவல்துறை நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது நாங்கள் கூறுகிறோம்.
கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்பது கோரிக்கை. எனவே கட்டாய மத மாற்ற தடை சட்டம் வேண்டும் என்கிறோம்.
கூட்டணி தொடர்பான முடிவை மாநில தலைவர் அறிவிப்பார். சில இடங்களில் தான் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை நாங்கள் கடைப்பிடிப்போம். கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.
நயினார் நாகேந்திரன் தான் பேசியது தவறு என்று ஒப்புக்கொண்டார். அவர் பேசியதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு இவ்வாறு அவர் கூறினார்.
0
0