கோவையில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

5 September 2020, 9:06 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 545 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் ஐ.எல்.ஐ. வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் 22 வயது ஆண், 22 வயது பெண் ஆகிய பயிற்சி மருத்துவர்களுக்கு மொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியற்றி வரும் 35 வயது ஆண் மருத்துவப் பணியாளர். சாய்பாபாகாலனி காவல் நிலையத்தை சேர்ந்த 44 வயது பெண் காவலர், 51 வயது ஆண் காவலர், சட்டக் கல்லூரி குடியிருப்பை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர போத்தனூரில் 50 பேர், சிங்காநல்லூரில் 27 பேர், குனியமுத்தூரில் 25 பேர், சூலூரில் 23 பேர், மேட்டுப்பாளையத்தில் 16 பேர், காரமடையில் 15 பேர், செல்வபுரத்தில் 13 பேர், ரத்தினபுரியில் 12 பேர், காந்திபுரத்தில் 10 பேர் உள்பட 545 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 18 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் இதுவரை 323 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும்,இன்று 366 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 4

0

0