பாழாகி போன பறிமுதல் வாகனங்கள் : ஏலம் விடும் போலீசார்!

Author: kavin kumar
7 January 2022, 2:04 pm
Quick Share

திருச்சி: திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 96 வாகனங்களை போலீசார் ஏலம் விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் வழக்குகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் பயன்படுத்ததும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றையும் மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல்துறையினர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும். அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 91 இருசக்கர வாகனங்கள்,

3 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள் என 96 வாகனங்கள் திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் சுப்ரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2000, நான்குச் சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 செலுத்தி ஏலம் கோரினர். வாகனத்தை பொறுத்தவரை அதன் செயல்பாட்டை பொறுத்து ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய வாகனத்தை ஏலம் கேட்டு பணம் செலுத்தி எடுத்துச் சென்றனர்.

Views: - 210

0

0