நடை சாத்தப்பட்டும் திரண்டு வந்த படை : பண்ணாரி அம்மன் கோவிலில் விதிகளை பின்பற்றாமல் குவிந்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 3:04 pm
Bannari Kovil - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கொரானா விதிமுறைகளை மீறி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், நேற்று முதல் நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு வழக்கம்போல மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்று கோவில் முன்பு குவிந்தனர். கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்த போதிலும், வெளிப்புறத்தில் பக்தர்கள் சூடம் ஏற்றி மழைபோல் உப்பு குவியலையும் ஏற்படுத்தி அதன் முன்பு குங்குமம், திருநீறு, சந்தனம் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஏராளமானோர் அன்னதானமும் வழங்கினர். கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை சாத்தப்பட்டு இருந்த போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பண்ணாரி கோவில் முன்பு குவிந்து வழக்கம்போல் சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமானோர் முகக் கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக குவிந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 316

0

0