பண்ணாரி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குவிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 4:51 pm
Bannari Amman Temple- Updatenews360
Quick Share

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பண்ணாரி அம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று பண்ணாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. கோவிலின் முன்பு இருந்த குண்டத்திற்கு பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி கற்பூரம் ஏற்றியும், பெண்கள் நெய்தீபம் ஏற்றியும் நீண்ட நேரம் வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Views: - 640

0

0