மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக மலிவு அரசியல் : அன்பழகன் குற்றச்சாட்டு…
Author: kavin kumar1 பிப்ரவரி 2022, 4:58 மணி
புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கொண்டு திமுக, காங்கிரஸ் மலிவு அரசியல் செய்வதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை சட்டமன்றத்தில் அதிமுக எதிர்த்தது என்றும், பொதுமக்கள் பாதிக்ககூடிய எந்தவித போராட்டத்திற்கும் அதிமுக துணை நிற்காது எனவும் தெரவித்தார். மேலும் மின்துறை தனியார் மயமாக்கலை அதிமுக எதிர்ப்பதாகவும்,
தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு, ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை கொண்டு திமுகவும், காங்கிரசும் மலிவு அரசியல் செய்து வருவதாகவும் திமுகவின் இந்த செயல் கண்டிக்கதக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
0
0