ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக இளைஞர்… தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடித்துக் கொடுத்த கோவை பொதுமக்கள்!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 9:32 am
Quick Share

கோவை ; ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.கவைச் சேர்ந்த இளைஞரை தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஊர் பொதுமக்கள் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இத்தொகுதி தேசியளவில் கவனம் பெற்று உள்ளது. கோவை பாராளுமன்ற தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும் அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வென்று உள்ளது. பா.ஜ.க இங்கு 2 முறை வென்று உள்ளது.

மேலும் படிக்க: விஷாலை அரசியலில் இயக்கப் போவது யார்…? விஜய் கட்சியை பலவீனப்படுத்த அவதாரம்!

அண்ணாமலையை வெற்றி பெறுவதற்கு பிரதமர் , நிதியமைச்சர், மற்ற மாநில பாஜக நிர்வாகிகள் கோவையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவையில் தி.மு.க வேட்பாளரான கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க மேயராக இருந்தவர். காங்கிரஸும் இந்த தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டது. அண்மையில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தனர்.

இடதுசாரிகளுக்கும் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின் பா.ஜ.க வலுவாக காலூன்றி நிற்கிறது. அ.தி.மு.கவும் கோவையை தங்களது வலுவான பகுதியாக உருவாக்கி வைத்து உள்ளது.கோவை பாராளுமன்ற தொகுதியில் வெல்லப் போவது யார் ? என்பது கணிக்க முடியாத யூகத்துக்கு உரிய தொகுதியாக உள்ளது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறாங்க ; கோவையில் கருணாஸ் பிரச்சாரம்!!

இந்நிலையில், நேற்றிரவு துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்திலுள்ள 15 வது வார்டு பொது மக்களுக்கு தி.மு.க வினர் பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர்மக்கள், பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரை பிடித்தனர். கூட வந்த இரண்டு பேர் தப்பினர்.

பிடிபட்டவரிடம் ஊர்மக்கள் விசாரித்ததில், தனது பெயர் மனோஜ் (23) எனவும், திமுகவைச்சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க சொன்னதால், வந்து பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மனோஜை துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்க வைத்திருந்த 42,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். துடியலூர் காவல் துறையினர் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 149

0

0