‘வேலையை செய்ய விடாம தடுக்கறாங்க… தட்டிக்கேட்டால் மிரட்டுறாங்க’ ; காவல்நிலையம் முன்பு பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

Author: Babu Lakshmanan
18 April 2023, 5:01 pm
Quick Share

திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக தன்னை மிரட்டுவதாக பெண் கவுன்சிலர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் ஊராட்சியில் வசித்து வருபவர் தேன்மொழி .இவர் பூண்டி ஒன்றியத்தில் நான்காவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.

இதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் வேல்முருகனக்கும், தேன்மொழி கணவர் ஏழுமலைக்கும், கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில நாட்களாக கவுன்சிலர் தேன்மொழி மீது அவதூறு செய்திகளை பரப்புவதும், ஊராட்சி சார்ந்த பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகவும், தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கவுன்சிலர் தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கிராம பொதுமக்களுடன் இணைந்து பெண் கவுன்சிலர் தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

Views: - 217

0

0