போதைப் பொருள் கடத்திய பிரபல கட்சி பிரமுகர் கைது.!

12 August 2020, 1:38 pm
Drug Smuggling Arrest - Updatenews360
Quick Share

திருச்சி : போதை பொருள் கடத்தலில ஈடுப்பட்ட பாஜக பிரமுகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் டவுனைச் சேரந்தவர் அடைக்கலராஜ் (வயது 40). திருச்சி மாவட்டம் நொச்சியத்தை அடுத்த மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் (வயது 40). இருவரும் நணபர்கள். இருவரும் நேற்று திருச்சியில் காரில் சுற்றி வந்த நிலையில் அவர்களது காரில் போதைப்பொருளான அபின் இருப்பதாக போதைப்பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு பிரிவு மற்றும் ஓருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ அபின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.10 லட்சம் ஆகும்.

இருவரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த கார் பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், திருச்சிக்கு கட்சி ஆலோசனைக்கு கூட்டத்திற்காக வந்திருந்த டாக்டரிடம் தனது காரை அடைக்கலராஜ் கொடுத்து விட்டு அவரது காரை எடுத்து வந்த விபரமும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த போதைப்பொருள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்ததும் என்பதும் பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மூலம் அது தங்களுக்கு கிடைத்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த கடத்தலுக்கு தொடர்புடைய மேலும் 3 நபர்கள் உட்பட 5பேரையும் போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

Views: - 11

0

0