பழனி முருகனை தரிசனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி : சோழியை உருட்டி சொன்ன ஜோசியர்… உற்சாகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 10:23 am
EPS Palani - Updatenews360
Quick Share

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அஇஅதிமுக வின் இடைக்கால பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக அஇஅதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பழனி வந்தடைந்தார். பழனி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது‌.

தொடர்ந்து இரவு பழனியில் தங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ரோப்கார் மூலம் மலைமேல் சென்று, பழனி கோவிலில் நடைபெற்ற காலசந்தி பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தார்.

வேடர் அலங்காரத்தில் காட்சி தந்த முருகனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். எடப்பாடி பழனிச்சாமியுடன் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் சாமிதரிசனம் செய்தனர்.

முன்னதாக இந்த பயணத்திற்கு ஜோசியர் தான் காரணம் என கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ததற்குப் பிறகு போட்டிகளை வென்று முதல்வராக பதவியேற்றார் எனவும், அதனை பின்பற்றி நீங்களும் பழனி கோவிலில் தரிசனம் செய்தால் எதிர்ப்புகளை ஒழித்துவிட்டு மீண்டும் அதிமுகவின் தலைமையாகவும் தமிழக முதல்வராகவும் பதவியேற்க வாய்ப்புள்ளது என ஜோசியர் ஒருவர் கூறியதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்தப் பயணம் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவினர்.

Views: - 239

0

0