முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம் : 1500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்!!

Author: Udayachandran
1 August 2021, 8:33 pm
Fish - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : 2 மாத மீன்பிடி தடைக்காலம் முடிவுற்ற நிலையில் மீண்டும் மகிழ்ச்சியுடன் கடலுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மூன்று மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் ஏழு நாட்கள் முதல் பதினைந்து நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மேற்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் நீண்டகரை பகுதி முதல் கேரளா, மற்றும் குஜராத் கடல் பகுதிகளில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 2-மாதம் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த வருட மீன்பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக அமலில் இருந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட இன்று முதல் தடை நீங்கிய நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது நீக்கி ஐஸ், குடிநீர், டீசல் என அனைத்து அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்கின்றனர்.

Views: - 343

0

0