அந்த படத்துல நடிச்சது நினைச்சா ரொம்ப அசிங்கமா இருக்கு : எவர்கிரீன் கதாநாயகி அம்பிகா வருத்தம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 6:15 pm
Ambika - Updatenews360
Quick Share

80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பெரியதிரையில் கொடிகட்டி பறந்த அம்பிகா கடைசியாக அவன் இவன் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, வாழ்க்கையில் இந்த படத்தில் ஏன் நடிச்சோம் என நினைக்கிறார்களா என தொப்பாளர் கேட்ட கேள்விக்கு, அம்பிகா தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.

அதுவும் அந்த படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்தார்கள், நான் நடிக்க முடியாது என கிளம்பி வந்திருக்கலாம்.. ஆனால் என் கேரியரையே அந்த படம் கெடுத்து விட்டது என வருத்தப்பட்டார்.

ஆனால் அந்த படத்தின் பெயரை அவர் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் அந்த படம், அவன் இவன்தான் என கணித்துள்ளனர்.

Views: - 857

3

2