திருமணமாகியும் தங்கைக்கு ‘தொல்லை‘ கொடுத்த முன்னாள் காதலன் கொலை : அண்ணன் தலைமறைவு!!

16 November 2020, 4:41 pm
Viruthunagar Murder - Updatenews360
Quick Share

விருதுநகர் : இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தங்கையின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த காதலனை வெட்டிப்படுகொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை அவரது அண்ணன் கண்டித்துள்ளார்.

இதற்கிடையில் செந்திலின் தங்கை அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் முன்னாள் கள்ளக்காதலன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் நெருங்கி பழக ஆரம்பித்து தொந்தரவு கொடுத்துள்ளார்.

அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக இந்த தகவல் அந்த பெண்ணின் அண்ணன் செந்தில்குமாருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து நேற்று செந்தில்குமார் கடை பகுதியில் நின்றிருந்த ரவி என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்..

Views: - 17

0

0