தேசியக்கொடி, காய்கறிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

26 January 2021, 12:08 pm
Quick Share

கோவை: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி
விவசாயிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
வாழை மரங்கள், காய்கறிகளுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் இன்று தேசியக்கொடியுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவினாசி சாலை தண்டுமாரியம்மன் கோவிலில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள், கையில் கய்கறிகள், வாழை மரங்கள், பழங்கள் மற்றும் மோட்டார் பம்பு செட்டுகளை ஏந்திய படி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில் ,”டிராக்டரில் வந்து போராட்டத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், வாழ்க்கையோடு ஒத்துப்போன வேளாண் கருவிகளோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விவசாயிகளை தலை குனியவைத்து விட்டு தலை வணங்குவதாக மோடி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக முதல்வர் குரலெழுப்ப வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும். அதுவரை போராடுவோம். என்றார்.

Views: - 8

0

0