காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருவர்களுக்கு சன்மானம்: வைரலாகும் போஸ்டர்…

Author: kavin kumar
5 February 2022, 3:17 pm
Quick Share

மதுரை : மதுரையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளார் நாயின் உரிமையாளரின் செயல் பேசு பொருளாக மாறியுள்ளது.

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த பெரோஸ் கான் என்பவர் வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு காணாமல் போயுள்ளது. இந்நிலையில் அந்த நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்குவதாக அவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில், காக்கி நிறத்தில் உயரம் குறைந்த குட்டையான 11 வயதுடை நாய் கழுத்தில் சிறிய மணி அணிந்திருக்கும் என குறிப்பிடபட்டுள்ளது.மேலும், அந்த நாயை கண்டுபிடித்து தருவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Views: - 439

1

0