முதலமைச்சரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள்.. அதிமுக பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்காமல் நெருக்கடி : விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 9:45 pm
Quick Share

கரூர் : முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கு மாறாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- தமிழக அளவில் ஆங்காங்கே ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்களை மாற்றி வரும் திமுக ஆட்சிக்கு மத்தியில், கரூர் மாவட்ட அளவில் ஊராட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து பிரதிநிதிகள் என்று பலரும் அதிமுகவை சார்ந்தவர்கள் என்றால், அவர்களுக்கு நிதி கொடுக்காமல், திமுக கவுன்சிலர்களுக்கு மட்டும் நிதி கொடுத்து, அதிமுகவினருக்கு கொடுக்காமல், பஞ்சாயத்து பணிகளை தடுத்து வருகின்றனர்.

கரூரில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் நண்பர். எம்.சி.எஸ்.சங்கர் என்பவரை சந்தித்த பின்னர்தான், அதுவும் திமுக கட்சி மாறினால் தான் நிதி என்று உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டி வருகின்றனர். ஆகையால், அதிமுகவில் இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுக கட்சிக்கு வந்தால் மட்டுமே நிதி என்று மிரட்டி, திமுக கட்சிக்கு இழுத்து வரும் நிலையில், செய்யக்கூடிய தொழில்களில் இடையூறு செய்து கட்சி மாற வைப்பது, எந்த நிதியும் வழங்கவில்லை, ஒன்றியங்களில் உள்ள பொதுநிதியை தவறாக காட்டி, மைனஸ்-ல் கணக்கு காட்டுகின்றார்கள்.

15வது நிதிக்குழுவின் நிதி வந்த நிலையில், அதையும் அதிமுக கவுன்சிலர்களுக்கும், பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கும் கொடுக்காமல், அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்று பார்க்க வேண்டும், அப்படி இல்லை என்றால், அவரது நண்பர் எம்.சி.எஸ்.சங்கர் என்பவரை சென்று பார்த்து வந்தால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்றும், ஒப்பந்தமும் கிடைக்கும் என்றும் மிரட்டி வருகின்றார்கள். காதப்பாறை பஞ்சாயத்து தலைவர் அதிமுகவினை சார்ந்த நிர்வாகி என்பதினால், அவர் மீது 205 போட்டு பஞ்சாயத்தினை முடக்கி வைத்துள்ளனர்.

ஆகையால், இந்த பிரச்சினைகளை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம். இன்னும் இதனை சரி செய்யவில்லை என்றால், மிகப்பெரிய ஆர்பாட்டம், போராட்டங்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிக்காட்டுதலின் படி நடத்தப்படுமென்றும் கூறினார். மேலும், தற்போது நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது போன்று நடக்க கூடாது என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகத்தில் பார்த்ததாக தெரிவித்த, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவிற்கு தலைகீழாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒரு ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சம்பந்தமில்லாத செலவு கணக்குகளை நிராகரித்து விட்டு குறிப்பிட்ட தீர்மானங்களை பாஸ் செய்தால், அந்த அதிகாரிகள் அனைத்தையுமே நிராகரித்ததாக கணக்கு காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே மூன்று நான்கு கூட்டங்கள் அது போல நடைபெற்றால், அந்த ஒன்றியத்தின் நிதிநிலைமை அதிகாரம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் வந்து விடும். ஆகையால், திட்டமிட்டே திமுக வினர் அப்படி செய்கின்றார்கள். ஆகையால், பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்கள். இருந்தும் பயனில்லை, ஆகையால் எங்கள் கட்சி சார்பில் நாங்கள் கொடுத்துள்ளோம், ஆகையால், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் பல்வேறு கட்ட போராட்டங்களில் அதிமுக ஈடுபடும் என்றும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Views: - 669

0

0