கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் : பொதுமக்களுக்கு வழங்கிய தனியார் மருத்துவமனை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2021, 11:11 am
Free Vaccine - Updatenews360
Quick Share

கோவை : கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக வாகரயம்பாளையம் பகுதி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு கணிசமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் பெற்று கொண்டு ஊசி போடுகிறது.

இந்நிலையில் நிறுவனங்களுக்கான சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் தமிழக அரசால் துவங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவை கே.எம்சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக வாகரையம்பாளைம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முன்னதாக இதற்கான துவக்க விழா வாகரயம்பாளையம் ஆரம்ப சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் டீன் டாக்டர் குமரன், கே.எம்.சி.எச் மருத்துவகல்லூரி மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன்,மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா, கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த இலவச தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்த உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 257

0

0