நிவர் புயல் சோகத்திற்கு மத்தியிலும் ஒரு குட் நியூஸ் : ரூ. 37 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை..!!

25 November 2020, 1:42 pm
gold - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவென குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.

3வது நாளாக யாரும் எதிர்பார்க்காத விதமாக தங்கம் விலை இன்று கிடுகிடுவென ரூ. 320 சரிந்துள்ளது.

கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,600-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.36,800-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0