‘ஜெயலலிதா அவமதிக்கப்பட்டது உண்மையே’… நான் சாட்சி ; CM ஸ்டாலினுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 8:44 pm
Quick Share

சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திமுகவினரால் அவமதிக்கப்பட்டது உண்மை என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்திய கட்சி திமுக என விமர்சித்து பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறியது குறித்து பதில் அளித்தார். அதாவது, நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார் என்றும், ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும், இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்ததாகவும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசியதாகவும் கூறினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிலுக்கு புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை என்றும், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று பொய்யான தகவலை முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது வருத்தமளிப்பதாக கூறினார்.

Views: - 303

0

0