மளிகை கடன் பாக்கியால் மனையை இடித்தவர் மீது வழக்கு : மூதாட்டிக்கு குவிந்த ஆதரவு!!

7 September 2020, 10:55 am
Grandma Plea Success - updatenews360
Quick Share

கோவை : பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த முதாட்டியை ஏமாற்றி இடத்தை பறித்தவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மதுக்கரை முஸ்லீம் காலனி பகுதியை சேர்ந்த கண்ணாம்மாள். பட்டியல் சமூதாயத்தை சேர்ந்த மூதாட்டியான இவரின் மூன்று சென்று இடத்தில் உள்ள வீட்டை இடித்தும், ஒரு செண்ட் இடத்தை போக்கியம் என்று ஏமாற்றி எழுத்தறிவில்லாத மூதாட்டியிடம் தன்னுடமையாக்கியவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம்.

இது தொடர்பாக பின்னர் தெரியவந்த மூதாட்டி மற்றும் அவர் குடும்பத்தார் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ஆறுமுகம் மற்றும் அவரின் மனைவி மகன் சேர்ந்து மூதாட்டி கண்ணாம்மாள் அவரது மகளை தரம் குறைவாக பேசியும், இழிவாக சாதியின் பெயரை சொல்லி திட்டியும், வீட்டை இடித்து கண்ணாம்மாள் மகளையுன் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ஆரம்பத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் அழுத்தத்துக்கு உள்ளானது.

பின்னர் ஆறுமுகம் மற்றும் அவரின் குடும்பத்தாரின் செயலை விசாரித்த காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்புள்ளதாக தெரிகின்றது.

மூதாட்டியை ஏமாற்றி நிலத்த அபகரித்து சாதியின் பெயரை சொல்லி திட்டி வன்கொடுமை செய்த ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஒருபோதும் இது போன்ற தவறுகள் நிகழாத வண்ணம் அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

Views: - 0

0

0