நீலகிரி, கோவை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
7 August 2021, 4:18 pm
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம், தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain Warn - Updatenews360

திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 776

0

0