டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: நாளை கனமழைக்கு வாய்ப்பு..!!

4 January 2021, 10:48 am
rain chance - updatenews360
Quick Share

சென்னை: பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

chennai metrology - updatenews360

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல, வருகிற 6, 7ம் தேதிகளில், மாநிலத்தில் பரவலாக சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம் 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0