வீட்டின் கூரையில் மேலும் ஒரு துப்பாக்கி குண்டு : பெரம்பலூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!!!

Author: kavin kumar
26 January 2022, 4:02 pm
Quick Share

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது. அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குண்டு பாய்ந்த சத்தம் கேட்ட போது,அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில்,அதே வீட்டுக்கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீட்டிற்குள் தொட்டில் கட்டியிருந்த பகுதிக்கு நேரே மேற்கூரையை துளைத்தப்படி துப்பாக்கி குண்டு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் இருப்பதால் அச்சத்துடன் வசித்து வருவதாகவும்,இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு குண்டு கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 529

0

0