மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணி தீவிரம் : பழைய பொதுப்பணித்துறை கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 10:20 am
Madurai Kalaignar Library - Updatenews360
Quick Share

மதுரை : 70 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் நுாலகம் அமைக்க பழைய பொதுப் பணித்துதுறை கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியது .

மதுரையில் 2 லட்சம் சதுரடி பரப்பில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள அண்ணா நுாலகம் போன்ற தென் மாவட்ட மக்களுக்கு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் , உலக தமிழ் சங்க வளாகம் உள்ளிட்ட 6 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பல காரணங்களால் இடம் தேர்வு செய்யப்படவில்லை .

இதனையடுத்து புதுநத்தம் சாலையில் உள்ள பொதுபணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை அமைச்சர்கள் வேலு , மூர்த்தி ஆய்வு செய்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர் .

இந்நிலையில் இந்த இடத்தில் உள்ள கட்டிடத்தில் பென்னி குயிக் தங்கியதாக கூறி நுாலகம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி கட்டடம் 1912 ல் கட்டப்பட்டது.

பென்னி குயிக் 1911 ஆண்டிலேயே இறந்து விட்டார். அவர் இங்கு தங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது . தொல்லியல் நிபுணர்களும் பென்னி குயிக் இக்கட்டடத்தில் தங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர் .

அதனடிப்படையில் இக்கட்டட வளாகத்தில் நுாலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு , பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தும் பணி துவங்கி உள்ளது.

Views: - 332

0

0