நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கலாமே… ரெய்டு நடத்தி அவமதிப்பதா…? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
10 August 2021, 1:04 pm
Jayakumar- Updatenews360
Quick Share

சென்னை : எதிர்கட்சிகளின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழுப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான சுகுணாபுரம் வீட்டின் முன்பு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், “ஆளுங்கட்சி என்கிற மமதையில் திமுக செயல்பட்டு வருகிறது. 2016-18 காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட புகாரில் ரெய்டு என்கிறார்கள். சட்டம் உள்ளது, நீதிமன்றம் உள்ளது. அதில் நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம்.

நாட்டில் எவ்வளவோ மக்கள் பிரச்சினை உள்ளபோது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நீதிமன்றம் உள்ளது. அங்கு வழக்கு தொடரலாமே அதை விடுத்து ரெய்டு செய்து ஒரு அவமான பிரச்சினையை உருவாக்கலாமா? களங்கப்படுத்த முயற்சிக்கலாமா? காவல்துறை உள்ளது. அது விசாரணை நடத்தட்டும்,” என்றார்.

Views: - 249

0

0