குமரியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கேரள வாலிபர் கைது : கள்ள நோட்டு மஃபியா கும்பலா..? என விசாரணை

6 July 2021, 5:12 pm
kumari fake currency - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உரம்பு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு நேற்று வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ரக மது கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது மதுக்கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டை பரிசோதித்து பார்த்தபோது அந்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அவரை விசாரித்த போது அவரிடம் மேலும் சில கள்ள நோட்டு ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவர் கேரள மாநிலம் பொழியரை சேர்ந்த பைஜூ (29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கள்ளநோட்டு ரூபாய்களை சந்தையில் புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

பின்னர் அவரிடமிருந்த ரூ 3500 மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரின் பின்னணியில் வேறு ஏதாவது கள்ள நோட்டு கும்பல் உள்ளனரா என்ற சந்தேகத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 320

0

0