யூடியூப் சேனல் நடத்திய இளைஞர் கத்தி முனையில் கடத்தல்…ஒரு மணி நேரத்தில் நடத்ந ட்விஸ்ட் : தருமபுரியில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 5:45 pm
Youtube Channel - Updatenews360
Quick Share

யூடியப் சேனல் நடத்திய இளைஞர் கத்தி முனையில் கடத்தல்…ஒரு மணி நேரத்தில் நடத்ந ட்விஸ்ட் : தருமபுரியில் பயங்கரம்!!

தர்மபுரி மாவட்டம், லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 31. இவர், தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் யூ – டியூப் சானல் அலுவலகம் நடத்தி வருகிறார்.


நேற்று காலை, 11:30 மணிக்கு, 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்தகுமாரின் அலுவலகத்துக்குள் புகுந்துள்ளனர். அவர்கள், எதற்காக எங்களது யூ – டியூப் சானலில் போலியாக பார்வையாளர்களை அதிகபடுத்தினாய். இதை நீ மட்டும் செய்தாயா? வேறு யாருடனும் சேர்ந்து செய்தாயா என கேட்டு ஆனந்தகுமாரை தாக்கியுள்ளனர்.

மேலும் பட்டன் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தகுமாரை காரில் கடத்தி சென்றதுடன், அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் தூக்கி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, ஆனந்தகுமார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தர்மபுரியை சேர்ந்த பிரோம்குமார், (வயது 18) என்பவர், தர்மபுரி டவுன் போலீசுக்கு காலை 11.30 மணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன்ஜேசுபாதம், தர்மபுரி டி.எஸ்.பி., செந்திகுமார், தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ஆனந்தகுமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில். ஆனந்தகுமாரை கடத்திய சின்னச்சாமி என்பவர் யூ– டியூப் சானல் நடத்தி வந்தது தெரியவந்தது.   மேலும், ஆனந்தகுமார் தங்களது யூ – டியூப் சானலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல் பொய்யான தகவலை பதிவிட்டுள்ளதாகவும்,  இதனால், தங்களது  சானலை யூ– டியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.

இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என அவரை  கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமி, 38, இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன், 30, கோடியூரை சேர்ந்த சுந்தரம், 30, சுரேஷ், 39, எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன், 26, ராமு, 30, மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ், 35, பெரியசாமி, 27, கிருஷ்ணாபுரம் சந்திரன், 29, தர்மபுரி தினேஷ்குமார், 23, சோளப்பட்டி மணி, 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருததி ஸிப்ட் கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 12 பேரையும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். தர்மபுரியில் யூடியூப் சேனல் தொழில் போட்டியில் பட்ட பகலில் கத்தி முனையில் கடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 262

0

0