தமிழக வாழ்வுரிமை நிர்வாகி தலை துண்டித்துக் கொலை… நள்ளிரவில் அரங்கேறிய இரட்டைக்கொலை ; ஒசூரில் பயங்கரம்…!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 8:07 pm
Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத். 31 வயதான இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓசூர் நகர முன்னாள் தலைவராக இருந்தவராவார். அதேபோல, பழைய வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்ற சிவா (27) அக்கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ்.

இவர்கள் மூவர் மீதும் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், பக்கா பிரகாஷ் குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை சிவாவும், பர்கத்தும் சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒசூருக்கு அழைத்து வந்தனர். பிரகாஷை அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு, காரில் ஏறுவதற்காக இருவரும் சாலையில் நடந்து சென்றனர்.

அந்த சமயம், அங்கு மறைந்திருந்த 15 பேர் கொண்ட கும்பல், சிவாவின் தலையைவெட்டி தெருவில் வீசினர். மேலும், பர்கத்தை வெட்ட முயன்றபோது, அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பக்கா பிரகாஷின் வீட்டில் உள்ளே நுழைந்தார். இதையடுத்து, இவரை சேலம்சிறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு பர்கத் மற்றும் சிவா ஆகியோர் காரில் ஓசூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் பார்வதி நகரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு, இருவரும் காரில் ஏற நடந்து வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த 15 பேர் கொண்ட கும்பல் சிவாவின் தலையை வெட்டி தெருவில் வீசினர். மேலும், பர்கத்தை வெட்ட முயன்றபோது, அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பக்கா பிரகாஷின் வீட்டில் உள்ளே நுழைந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட பக்கா பிரகாஷ் சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து தப்பியோடினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கா பிரகாஷ் வீட்டின் சுவரில் ஏறி குதித்து அங்கிருந்து தப்பினார். வீட்டின் உள்ளே சென்ற பர்கத், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடினார். ஆனால், அந்த கும்பல் வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்து பர்கத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து பக்கா பிரகாஷ், ஓசூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று கொலையான இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Views: - 566

0

0