தீபாவளிக்கு வசூல் வேட்டையா..? ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை…!!!

Author: Babu Lakshmanan
29 October 2021, 8:02 pm
kumbakonam raid - updatenews360
Quick Share

தீபாவளி வசூல் வேட்டையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் இன்று அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே 3 இடங்களிலும், 2 புரோக்கரிடம் கணக்கில் வாரத 75 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், பணம் பறிமுதல் செய்யப்பட்ட புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், டிராவல்ஸ், டிரைவிங் பள்ளி போன்ற பல்வேறு உரிமையாளர்கள் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், இந்த அதிரடி சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையில் நடத்தப்பட்டது. சோதனையில், வெறும் ரூ 190 மட்டுமே இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு ரூ 2920 க்கு ரசீது போட்ட நிலையில் கையிருப்பு ரூ.190 மட்டும் தான் இருப்பதாகவும், பணம் பற்றாக்குறை குறித்து துறைரீதியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என தகவல் தெரியவந்துள்ளது.

கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி நடராஜன், இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சுமார் 2 1/2 மணி நேர சோதனை சப்பென்று, அதுவும் ரூ 190 மட்டுமே கையிருப்பு அதிலும் ரூ. 2,730 பற்றாக்குறையாக இருந்த விஷயத்தால் அதிகாரிகளையே நகைப்பில் ஆழ்த்தியிருக்கும்.

Views: - 412

0

0