அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி: சடலத்தை இழுத்துச் சென்ற காட்டுப்பன்றிகள்…வைரல் வீடியோ..!!

Author: Rajesh
5 May 2022, 5:55 pm
Quick Share

திண்டுக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்தது. சிறுத்தை குட்டி உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது

Views: - 676

0

0