‘அரசு இப்படி பண்ணுனா.. குடிமக்கள் நாங்க சாகுறதா..?’ ; மதுபாட்டிலில் மிதக்கும் லேபிள்.. மதுப்பிரியரின் குமுறல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 6:22 pm
Quick Share

அரசு டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் லேபிள் மிதந்ததால் மதுப்பிரியர் ஒருவர் தனது குமுறலை வீடியோவாக வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகர் குருவிக்காரன் சாலை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த சிவ பிரபு என்ற வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார். அவர் வாங்கிய மது பாட்டிலில் மது பாட்டிலில் மூடியில் இருக்க வேண்டிய லேபிள், உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அதனை வீடியோவாக பதிவு செய்த அவர், “அரசு விற்பனை செய்யும் இந்த மது பாட்டில் இப்படி இருக்கலாமா..? குடிமக்கள் பாவம் இல்லையா..? குடிமக்கள் சாகிறதா..?,” என பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் அரசு மதுபான கடை இந்த பாட்டிலுக்கு பதிலாக புதிய பாட்டில் தர மறுத்ததாகவும், அலைக்கழித்ததாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது. அரசு விற்பனை செய்த மது பாட்டிலில் லேபிள் இருந்த சம்பவம் குடிமகன் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Views: - 157

0

0