இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் காதல் : வீட்டுக்கு வரவைத்து நண்பருடன் சேர்ந்து சிறுவன் செய்த செயல்!!

30 November 2020, 1:41 pm
Minor Girl rape - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : சமூக வலை வலைத்தளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனைத் தேடி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மைனர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பதினேழு வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவன் நட்பாக பழகினான். இதைத்தொடர்ந்து இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாளில் காதலனைத் தேடி 17 வயது சிறுமி திருவள்ளுவருக்கு வந்துள்ளார். அங்கு அவரை சந்தித்த காதலன் அந்த சிறுமியை திருப்பாச்சூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து மனவேதனையுடன் திரும்பிச் சென்ற சிறுமி சில தினங்கள் கழித்து தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி இது குறித்து போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சத்தியவாணி, சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவனை கைது செய்தார். ஆனால் கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட சிறுவனின் நண்பன் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் சிறுவனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மொபைல் போன் மூலம் அறிமுகமாகி காதல் என்ற பெயரில் மூன்றே நாட்களில் தனது கற்ப்பை இழந்த சிறுமியின் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு இளம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சத்தியவாணி வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 0

0

0