ஆபாச படங்களை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: 47 வயது நபர் போக்சோவில் கைது..!!

Author: Rajesh
23 April 2022, 11:40 am
Quick Share

கோவை: 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினம்(47). இவர் அப்பகுதியில் உள்ள நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் குத்தகைக்கு அளித்த உரிமையாளரின் 8 வயது மகள் நிலத்தில் விளையாட செல்லும் போது ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் சிறுமி தனக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள் குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது பொழுது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவர்கள் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

Views: - 719

0

0