கதவணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு ; கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 7:02 pm
Quick Share

கரூர் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லட்சம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிரி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரும், கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,05,642 கனஅடி நீர் வந்த வண்ணமாக உள்ளது.

கதவணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது வினாடிக்கு 1,04,422 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், தென்கரை வாய்க்கால் என நான்கு பிரதான வாய்க்கால்களில் விவசாய பாசனத்திற்காக 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

எனவே, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ, குளிக்க, துணி துவைக்கவோ கூடாது என்றும், மேலும், காவேரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்க கூடாது என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 566

0

0