சாருக்கு ஒரு ஊத்தாப்பம் : ஊத்தாப்பத்தால் சிக்கிய திமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவர் மகன்!!

20 August 2020, 9:42 am
Myl DMK Issue - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : பிரபல ரெஸ்டாரண்ட்டில் ஊத்தாப்பம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, திமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மகன் உட்பட ஆறு வாலிபர்கள் ஊழியர்களை கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோட்டில் வில்லேஜ் ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட வந்த ஆறு இளைஞர்கள் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று உணவக ஊழியர்கள் கூறியதால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து உணவக ஊழியர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமதுஅசரத் என்பவர், சிசிடிவி பதிவுகளுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை திமுக ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்பையன் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தி, திவாகர், அருண் உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பிரியாணி சம்பவத்தில் திமுகவின் பெயர் சிக்கிய நிலையில், ஊத்தாப்பத்திற்காக உடன்பிறப்புகள் சிக்கிய சம்பவம் திமுகவை தலைகுனியச் செய்துள்ளது. தொடர்ந்து திமுகவின்ர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 46

0

0