புதிய மின்சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பா..? தமிழக மின்கழக தொழிலாளர் சங்கம் விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 8:47 pm
Quick Share

புதிய மின் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா..? என்பது குறித்து தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் சங்க செயலாளர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.

புதிய மின் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வட்டார செயலாளர் சரவணன் கூறியதாவது :- புதிய மின்சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரியத்திலும் புதிய மின் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு இந்த மசோதாவை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கு கிடைத்து வந்த இலவச மின்சாரம் பாதிக்கப்படும். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மின்சாரத்தை விற்பனை செய்யும் போது, விவசாயிகள், பொதுமக்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை எதிர்த்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகத்திலும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

Views: - 202

0

0