கேரளா – கோவை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு : வாளையார் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த ஆட்சியர் எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2022, 5:35 pm
கோவை : தமிழக- கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் கொரானா நோய்தொற்று பரவல் மட்டுமின்றி டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுககுடன் கூடிய ஊரடங்கை அறிவித்த நிலையில் கோவை வாளையார் சோதனை சாவடியில் நடந்துவரும் நடந்துவரும் பாதுகாப்பு பணிகளையும் வாகன சோதனைகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் தற்பொழுது 309 பேருக்கு நோய்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் கொடிசியாவில் தற்பொழுது 350 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நோயின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் படுக்கை வசதிகளை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசாங்க மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து வரக்கூடிய பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழும் தடுப்பூசி இட்டுக் கொள்ளாதவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரானா கண்டறியும் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழும் காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் கேரளாவில் இருந்து வருவோர் சான்றிதழ் இன்றி வந்தால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் பொதுமக்கள் தடுப்பூசிகளை இட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
கேரளாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வனப் பகுதியிலிருந்து வன வழியாக வருவோரை தடுக்கவும் வன ஊழியர்களின் உதவியுடன் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கலெக்டர் சமீரன் தெரிவித்தார். பொதுமக்கள் முக கவசம் அணிவதையும் பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் வலியுறுத்தினார்.
0
0