ஆன்லைன் விசாரணை ரத்து… பிப்ரவரி 7 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை : நிபந்தனையுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 9:48 pm
Court Direct Inquriy - Updatenews360
Quick Share

கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டது .இதனை அடுத்து முழுக்க முழுக்க நீதிமன்றங்களில் விசாரணையானது காணொளி மூலமாக நடைபெற்றது.

அதற்குப் பின் ஒரு சில மாதங்கள் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், தொடர்ந்து டெல்டா மற்றும் ஒமிக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்திருந்த அந்த நிலையில் மீண்டும் நீதிமன்றங்களில் காணொளி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி காணொளி அல்லது இரண்டு முறைகளிலும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம்,.
வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்பால், நீதிமன்ற வளாகங்களில் உள்ள உணவகம், நூலகம் ஆகியவை செயல்பட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 981

0

0