இதுவரை இல்லாத உச்சம்.. சட்டுனு பிரேக் போட வைத்த பெட்ரோல் விலை.. மதுரையிலும் சதம் விளாசியது!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 11:36 am
Petrol century - Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் மதுரையிலும் பெட்ரோல் விலை சதமடித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 ரூபாயை எட்டியுள்ளது.

மதுரையில் நேற்று லிட்டர் ரூ 99.82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் இன்று 32 காசு அதிகரித்து ரூபாய் 100.14க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று டீசல் லிட்டருக்கு ரூ.93.88 பைசாவாகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 23 காசு உயர்ந்து லிட்டர் ரூ.94.11ஆக உள்ளது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Views: - 198

0

0