குடியிருப்பு பகுதியில் துள்ளித்திரிந்த புள்ளிமான்: ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ!!

Author: Rajesh
9 February 2022, 11:43 am
Quick Share

கோவை: துடியலூர் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பகல் நேரத்தில் புள்ளி மான் ஒன்று துள்ளித் திரிந்து கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோவை துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 2 பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் புள்ளிமான் ஒன்று துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். சற்று நேரத்தில் அங்கிருந்த நாய்கள் குரைத்ததால் புள்ளிமான் அங்கிருந்து ஓடிச்சென்று மறைந்துவிட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியிலும் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 418

0

0